Tuesday

என்னுடையதில்லாத சில மற்றும் நீ

தூக்கத்தின்
கரையோரமாய் அமர்ந்து,
அழுது கொண்டிருந்தேன்.

ஆனந்தங்களால் செய்த
கவிதையொன்றுடன் மேலெழும்பி
"இது உன்னுடையதா?"
என்றாய்.

இல்லை என்றேன்.
உள்ளே சென்று விட்டாய்.

இம்முறை,
மனிதர்களால் எழுத சாத்தியப்படாத,
உனைப்பற்றிய
கவிதையொன்றுடன் வந்தாய்.
மிகுந்த நேர்மையுடன்,
என்னுடையது இல்லையென்றேன்.

வட்டமிடும் அலைப்பரப்புகளின் ஊடாக
உள்ளே சென்ற நீ,
விடியும் வரை
வரவே இல்லை.
'உன் நேர்மைக்கு பரிசாய்
என்னையே எடுத்துக்கொள்'
என்று கூறியபடி.

1 comments:

said...

பிரசன்னா,

மிகவும் பிடித்துள்ளது. நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது