பெரியாரும் பூணூலும்
பூணூலில்
அறுந்து தொங்குகிறது,
பெரியாரின் மானம்.
முகமொடிந்து விழுந்த
பகலவனின் தாடிக்குள்
ஒளிந்து கொள்கிறது,
கடவுளைக் காக்கப் புறப்பட்டோரின்,
வீரம்.
சுப்பனுக்கும், சுந்தரேசனுக்கும்
இன்னும் கிடைக்கவில்லை,
அகலப்பட்டை இணையம்.
அதனாலென்ன?
நாற்றமடிக்காமல் இருக்கட்டும்,
இணையத்தின் கொஞ்சம் பைட்டுகளேனும்.
3 comments:
பெரியார் இருந்தபோது எதிர்க்க முடியாத பருப்புகள் அவர் இறந்தபோது சிலையை உடைக்க முனைகின்றன!
nalla kavithai!
நன்றி, கீதா சாம்பசிவம்.
Post a Comment