Wednesday

சினிமா விமர்சனம் - Grindhouse



எச்சரிக்கை : கொஞ்சமா ரத்தம் பாத்தாலும், உங்களுக்கு மயக்கமோ, வாந்தியோ வருமா? அப்படியென்றால் இந்த படத்துக்கு போகாதீர்கள்.

நம்ம 'ஒரு வீடு, இரு வாசல்' மாதிரி, ஒரு படத்திற்குள் இரண்டு படமாக வந்திருக்கிறது 'GRINDHOUSE'. முதல் படம் 'Planet Terror'-ஐ ராட்ரிகஸ்ஸும், 2-ஆவது படம் 'Death Proof'-ஐ க்வென்டின் டேரன்டினோவும் இயக்கியிருக்கிறார்கள். அந்த காலத்தில் செக்ஸும், வன்முறையுமாக எக்ஸ்ப்ளாய்ட் செய்து எடுக்கப்பட்ட படங்களை திரையிடும் திரையரங்குகளை 'கிரைண்ட் ஹவுஸ்' என்று அழைப்பது வழக்கம். அப்படி எடுக்கப்பட்ட படங்களை நினைவு கூறும் விதமாக வந்திருக்கிறது இந்த படம்.

ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியால் உண்டாகும் விபரீதத்தால் மனிதர்கள் அனைவருக்கும் கொடூரமான வியாதி பரவி, சக மனிதர்களையே அவர்கள் தின்னத் தொடங்குகிறார்கள். அதை வீரமான ஹீரோ எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை. என்ன டுபாக்கூர் கதையாகத் தெரிகிறதா? அதுதான் மேட்டர். இதை வைத்து இரத்தம் வழிய வழிய படம் எடுத்திருக்கிறார், ராட்ரிகஸ்.

ஒரு கால் உடைந்தவுடன், மனமுடைந்து போகும் ஹீரோயினுக்கு, ஒரு துப்பாக்கியையே காலாகப் பொருத்தி, உன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையூட்டுகிறான் ( :-) ) ஹீரோ. அவளும் உடனே வேகம் பெற்று பறந்து கொண்டே சுடுகிறாள். ஹீரோவும், ஹீரோயினும் காதல் செய்கிறார்கள். ஹீரோவை கைது செய்யும் போலீஸ் அதிகாரி, கடைசியில் அவனிடமே துப்பாக்கியை கொடுத்து, நீதான் இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார். முகங்கள் வெடித்து சிதறுகின்றன. கட்டிகளிலிருந்து இரத்தம் கொப்புளிக்கிறது. எதிரியை சுடும்பொழுது 'என் குறி தவறாது' என்றும், காதலியிடம் 'நாம் இருவர், இந்த உலகிற்கு எதிராக' என்றும் பன்ச் டயலாக் பேசுகிறான் ஹீரோ. ஆனால் கடைசியில், சாகும் தறுவாயில் இருக்கும் அவனிடம், 'நாம் இருவர், இந்த உலகிற்கு எதிராக' என்று சொல்லிவிட்டு இப்பொழுது போகிறாயே என்கிறாள் ஹீரோயின். அதற்கு அவன், 'ஆம், நாம் இருவர், இந்த உலகிற்கு எதிராக, என் குறி தவறாது' என்கிறான் (புரிகிறதா? :-))

இரத்தத் திருவிழா முடிந்து இரண்டாவது படமான டெத் ப்ரூஃப் தொடங்குகிறது. டேரன்டினோ ஏமாற்றவில்லை. வழக்கம் போல டேரன்டினோவின் வசனங்கள் படத்தை சுவாரசியப்படுத்துகின்றன. ஆனால், கடைசி அரை மணி நேரம் நம்மை மூர்ச்சையாக்குபவை இறுதி காட்சியாக வரும் கார் சேஸ் காட்சிகள்தான். அதிலும் ZOE BELL, வாவ்!!!! இவர் மற்ற டேரன்டினோ படங்களில் சண்டை காட்சி அமைத்தவர் என்பது சிறப்பு.

படங்களுக்கு இடையில் வரும் ட்ரெயிலர்களும், ரீல்களில் வரும் கீறல்களும் பழைய படத்தை பார்ப்பது போலான அனுபவத்தை அதிகப்படுத்துகின்றன. அதுவும் ட்ரெயிலர்களுக்கே உரித்தான அந்த குரலில் வரும் 'Don't, Don't, Don't' என்ற ட்ரெயிலர் top notch creativity.

இதைப்போல, தமிழிலும் பழைய 'GRINDHOUSE' படங்களைப்போல் இப்பொழுது ஒன்று வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.ஆனால், நாம் இன்னும் GRINDHOUSE படங்கள்தான் எடுத்துக்கொண்டிருக்கிறோமோ?

4 comments:

said...

Intha karumathae Naan Tama muvico laan thaan paathan.. pathuttu next 3 days not able to eat anything ... I haven't understood the flow.. perhaps m not very familiar with old movies which they have imitated..i was expecting this to be another scary movie series....

said...

வினோ, கண்டிப்பாக இது எல்லோருக்குமான படமில்லை. 'ஸோம்பி(zombie) மூவி' என்றழைக்கப்படும் வகையறாவுக்கான ஒரு உதாரணமாக இதைக்கொள்ளலாம். வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.

said...

>>நாம் இன்னும் GRINDHOUSE படங்கள்தான் எடுத்துக்கொண்டிருக்கிறோமோ?

அப்டி பி மூவி எடுத்தாதான் பரவாயில்லியே. நம்ம இன்னும் musical மட்டும் தான பாத்துகிட்டேஇருக்கோம்.

said...

நம் படங்கள் பி-மூவி கூட இல்லை என்பது உண்மைதான். நம்மூரில் எடுக்கப்படும் மசாலாக்களையே அவ்வாறு குறிப்பிட்டேன். அதற்காக நான் மசாலா படங்களையோ, அதற்கான ரசிகர்களையோ குறை கூற வில்லை. ஆனால், மற்றைய வகைகளில் வரும் எதுவுமே நம் படங்களில் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம். வருகைக்கு நன்றி, பாலா.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது