கவிதை, கொஞ்சம் ஞானம்
1.தினமும் கடக்கும்
வழக்கமான சாலையில்
பழகிய பள்ளங்களைப்
போன்றது,
உன்னைப் பற்றிய நினைவுகள்.
தவிர்க்க நினைக்கும்
கவனமான
பயணங்களிலும்
நிலைகுலைந்து விழ நேர்கிறது,
ஓரிரு முறையேனும்.
2.அன்றும்,
உன் வருகையின் போது
மழைக்கம்பிகளில்
கவிதை
கோர்த்துக்கொண்டிருந்தேன்.
உயிர்த் தண்டவாளத்தில்
தட தடத்த இடி மின்னலில்
விழி இமைக்க,
தொலைந்து போயிருந்தது
மேகம் மட்டுமல்ல.
என் குடிசை
ஓலைகளின் வழியே
இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது,
தேங்கிய நீர்.
3.தனிமையின் கூட்டத்தில்
மூச்சுத் திணறி
நிசப்தக் கயிறு
குரல் வளையறுக்கும்போதெல்லாம்
உன் விரல்களைப் பிடித்துத்தான்
கரையேறுகிறேன்.
ஆசுவாசமடையும் கணத்தில்
காணாமல் போகின்றன கைகள்.
ஆனாலும்
ஒவ்வொருமுறையும்
இறங்குகிறேன் தீக்குளத்தில்.
சில நிமிடப் பற்றுதலுக்காய்
ஏங்கியபடி.
4.இன்றுதான்
கண்டுகொண்டேன்.
யசோதராவின்
காலடியில்
போதிமரம்.
பாவம்,
பழைய சித்தார்த்தன்.
(சிந்தாநதியின் போட்டிக்காக.)
16 comments:
கவிதைகள் அருமை.வாழ்த்துக்கள்
தினமும் கடக்கும்
வழக்கமான சாலையில்
பழகிய பள்ளங்களைப்
போன்றது,
உன்னைப் பற்றிய நினைவுகள்.
தவிர்க்க நினைக்கும்
கவனமான
பயணங்களிலும்
நிலைகுலைந்து விழ நேர்கிறது,
ஓரிரு முறையேனும்.
ரொம்ப அருமையான கவிதை...
நன்றி பரத்.
நன்றி சில்வண்டு.
கலக்குற பிரசன்னா!!!
//கலக்குற பிரசன்னா!!!
நன்றி, நன்றி :-))
நல்லா இருக்குங்க!
நன்றி தென்றல்.
//இன்றுதான்
கண்டுகொண்டேன்.
யசோதராவின்
காலடியில்
போதிமரம்.
பாவம்,
பழைய சித்தார்த்தன்.//
very nice!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சர்வேசன்.
"தனிமையின் கூட்டத்தில்
மூச்சுத் திணறி
நிசப்தக் கயிறு
குரல் வளையறுக்கும்போதெல்லாம்
உன் விரல்களைப் பிடித்துத்தான்
கரையேறுகிறேன்.
ஆசுவாசமடையும் கணத்தில்
காணாமல் போகின்றன கைகள்.
ஆனாலும்
ஒவ்வொருமுறையும்
இறங்குகிறேன் தீக்குளத்தில்.
சில நிமிடப் பற்றுதலுக்காய்
ஏங்கியபடி.
"
Migavum arumayaana kavithai. "தனிமையின் கூட்டத்தில்
மூச்சுத் திணறி" pothuvaaga ellorum ubayagogikka koodiya baani ithu. oru vaarthayin ethirpurathai prayogippathu. Anaal, intha idathil athanudaya prayogam saala sirappaaga ullathu. Mitra kavithaigalum nandraaga irunthuna, anaal ithuthaan aani tharamaana oru ennathai erpaduthayithu.
ஆழமான விமர்சனத்திற்கு நன்றி, அஷோக். Please keep them coming.
- கவித்துவமாய் இருக்கிறது என்று அழகான உரைநடை எழுத்துக்களை சொல்வோம், அது போல இந்த கவிதை இயல்பான உரைநடை style-ல் ஆரம்பித்து மிக அழகாக
இருக்கிறது
-பரத்
Thanks Barath. Please keep reading and post your valuable comments.
வெற்றிபெற வாழ்த்துக்கள் பிரசன்னா :-)
http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html
நன்றி, சேதுக்கரசி.
Post a Comment