ஒரு கொலை நடந்த கதை

அம்மா
நேற்றுதான் சொன்னாள்,
அந்தக்கொலை நிகழ்ந்த கதையை.
என் முப்பாட்டன்தான்
வீரமாய் வாளெடுத்திருக்கிறான்.
உடனே செத்துவிடவில்லையாம்,
அந்த அழுத்தக்காரி.
என் தாத்தனின்
படத்தைக் காட்டினாள்,
என் தாய்.
நீண்ட ஈட்டியால்
நெஞ்சிலே குத்தினவர்,
என் தாத்தாதானாம்.
கெஞ்சியும், மிஞ்சியும்,
தப்பித்திருக்கிறாள் அவள்.
பின்னர்,
முலைகளை
கத்தியால்
என் அப்பா அறுத்ததும்
பாலும், இரத்தமுமாய்
சிதறி இறந்திருக்கிறாள்.
எல்லாம் காய்ந்த பின்,
இப்பொழுதெல்லாம்,
எங்கேயும்,
எங்கள் கால்களில்,
ஒட்டுவதேயில்லை,
ஈரம்.
6 comments:
kuraikudam - peyar karanam ennavo ..
பெயர்க்காரணம் : எல்லாவற்றிலும் அரைகுறை என்பதுதான் (குறைகுடம் கூத்தாடும் :-) )
தங்களின் கரோக்கே வலைப்பதிவினை நீண்ட நாட்களாக படித்து/கேட்டு வருகிறேன். வருகைக்கு நன்றி, சௌம்யா.
பெண்ணிய வீழ்ச்சியைப் பேசும் கவிதை!
பூங்கா வழியாக வந்தேன்.
கவிதைக்கான பின்னூட்டங்களே இல்லாதது ஆச்சரியமூட்டுகிறது
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அனானி.
உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைச்சிருக்கேன் முடிஞ்சப்போ எழுதுங்க......
அழைத்தமைக்கு நன்றி, ராதா. கட்டாயம் எழுதுகிறேன்.
Post a Comment