நாங்களும் கவிஞர் ஆகிட்டோம்ல
பரிசு பெற்ற கவிதை :
தினமும் கடக்கும்
வழக்கமான சாலையில்
பழகிய பள்ளங்களைப் போன்றது
உன்னைப் பற்றிய நினைவுகள்
தவிர்க்க நினைக்கும்
கவனமான பயணங்களிலும்
நிலைகுலைந்து விழ நேர்கிறது
ஓரிரு முறையேனும்.
சுட்டிகள்:
http://tamilnathy.blogspot.com/
http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html
ஏற்புரை :-):
தமிழ்நதி, சிந்தாநதி, மற்றும் "விடை தேடும் வினா" குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். எழுதுவது கவிதையா என்று ஊர்ஜிதமாகாத நிலையில் (இதை தமிழ்நதி அவர்கள் சொல்வது தன்னடக்க வகையறாவை சேர்ந்தது :-)), நான் மிகவும் மதிக்கும் தமிழ்நதி அவர்களிடமிருந்து இந்த முடிவு வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி.
20 comments:
அருமையான வார்த்தைகள் இந்த கவிதையில் ...கவிதை தாங்க ஏன் பரிசில் கிடைத்த பின்னால் புலவருக்கு இப்படி ஒரு சந்தேகம்.
பாராட்டுக்கள் ப்ரசன்னா!!
வாழ்த்துகள்!
//பழகிய பள்ளங்களைப் போன்றது//
பழகிய பள்ளங்களைப் போன்றவை
ஏற்பில்லையா??!
சரியான திருத்தம்தான், வாசகன். ஆனாலும், எழுதி முடித்து பரிசுக்கும் தேர்வான பிறகு மாற்றவேண்டாமே என விட்டுவிட்டேன். வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
(ஆமாம், வாழ்த்துக்கள் சரியா? வாழ்த்துகள் சரியா? :-) )
நன்றி ராதா.
முத்துலட்சுமி, :) மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் :-)
நன்றி சேதுக்கரசி.
Bossu, neenga piringa ! Intha alavukku ennangalai vaarthaigala kondu vara kaaranamaanavanga yaaru ? (Thayavu seithu, "Kaathal enbatha oru vithamaana unarchi", appadinnu dialogue vidaama sollunga :-P)
Ooh, this is how the mac is used !!!
Good work, keep posting!
//...........kaaranamaanavanga yaaru ?
"Kaathal enbatha oru vithamaana unarchi"!!!
:-))
Thanks Ashok.
Thanks for the visit and comments, gokul.
அங்கேயே வாசித்தேன்.
வாழ்த்துக்கள்!!!
நன்றி, அருட்பெருங்கோ.
கவிதை நன்றாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, பிருந்தன்.
வாழ்த்துக்கள் ப்ரசன்னா !
நன்றி, பரத்.
வாழ்த்துக்கள் ப்ரசன்னா !
உங்களை 8 போட அழைத்திருக்கிறேன்; விபரங்களுக்கு http://vrkathir.blogspot.com/2007/07/8.html
Boss, Enna vera ethuvum post panna maattengreenga? Enna busy aah?
அழைத்தமைக்கு நன்றி, கதிரவன். தாமதத்திற்கு வருத்தங்கள். எழுத முயற்சிக்கிறேன்.
அஷோக், ஆணி கொஞ்சம் ஜாஸ்தி, அதான். :-) சீக்கிரமே எழுதறேன்.
Post a Comment