பெய்துகொண்டிருக்கிறது மழை
அதிகாலை மண்வாசனையாகத்தான்
நினைவிலிருக்கிறாள்,
எட்டாம் வகுப்பு ஈஸ்வரி.
மழை,
சத்தமில்லாமல்
உறக்கம் கலைக்காமல்
இரவு முழுதும் பெய்திருக்கிறது போலும்!
மழை தேடி
வானம் பார்த்திருந்த காலங்களில்,
விழியோரமாய் வழிந்தோடிவிட்டாள்,
கல்லூரியின் கவிதா.
ஆனாலும் என்ன?
இன்னும் பெய்துகொண்டுதானிருக்கிறது,
மழை.
கவிதைகளுக்கான
புதுப்புது காரணங்களை சுமந்தபடி.
தேங்கியிருந்தவை ஆவியாகி,
மேலே சென்று,
குளிர்ந்த காற்று பட்டவுடன்
மீண்டும்
பெய்வதுதானே மழை!
6 comments:
ஒரு சில நினைவுகள்
உருவம் பெற்று
வரும் போது தான்
கவிதைகள்
இனிக்கின்றன!
நினைவுகள் வலித்தாலும்
கவிதை இனிக்க தான் செய்யும்!
அருமையான கவிதை!!!!
Adhu sari.
For me, rain brings back memories of Milaga bajji and masala tea. :)
நன்றி, கார்த்திக்.
கோகுல், :-)
///இன்னும் பெய்துகொண்டுதானிருக்கிறது,
மழை.
கவிதைகளுக்கான
புதுப்புது காரணங்களை சுமந்தபடி.///
அட! கலக்கிட்டீங்க போங்க!
///இன்னும் பெய்துகொண்டுதானிருக்கிறது,
மழை.
கவிதைகளுக்கான
புதுப்புது காரணங்களை சுமந்தபடி..///
:-))))))
Thanks for the visit lakshmi.
Post a Comment