பிரிவு மற்றும் பிரிவின் நிமித்தமான இன்னுமொரு மொக்கை
பிரிவு மற்றும் பிரிவின் நிமித்தமான இன்னுமொரு மொக்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காலம் போராடி
தோற்றுப் போனது.
இன்னமும்
மூளையின் அடுக்குகளில்
பச்சை நிறத்தில் படர்ந்து கிடக்கிறது,
உன் பெர்ஃப்யூம் வாசனை.
நுரையீரலாகிப்போன
மூளையின் சுவாசங்களில்
இன்னும் கலந்திருக்கிறது
அதன் எச்ச்ங்கள்.
தனிமையின் ஈரம்
அடர்ந்த காற்றையும்,
இருள் கப்பிய
ஜன்னல்களற்ற அறைகளையும்
எதிர்த்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது
சுவாசமென்ற போராட்டம்.
முகர்ந்து பாருங்கள்.
இந்த கவிதையிலும்
படர்ந்திருக்கக்கூடும்,
அந்த பெர்ஃப்யூம் வாசனை.
5 comments:
பெர்ஃப்யூம் வாசனைக்குச் சொந்தக்காரப் பொண்ணு யாரு ப்ரசன்னா? :)
ETHU MOKKAI ILLA VATHIYARE....:)
வாசனை நிறைந்த கவிதை அருமை -
அமிழ்து, கார்த்திக் மற்றும் சீனா, வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
அட! மெய்சிலிர்க்குதுங்க! கவிதை அருமை!
Post a Comment