Before the devil knows you're dead (2007)

Movie : Before the devil knows you're dead (2007)
Director : Sidney Lumet
Cast : Philip Seymour Hoffman, Ethan Hawke, Albert Finney, Marisa Tomei
சில நேரங்களில் வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததைவிட குரூரமாக இருந்துவிடுகிறது. அதிர்ச்சியினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் நிலைதடுமாறும்பொழுது நமது எதிர்வினைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அத்தகைய ஒரு சிக்கலான கதையுடன் ஒரு குடும்பத்தினுள் நடக்கும் crime thriller திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, "Before the devil knows you're dead". Sidney Lumet அவரது படங்களுக்கே உரிய வகையில், மனித உணர்வுகளை ஆழமாக தொட்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே பெற்றொரின் போதிய அன்பு கிடைக்காமல் வளரும் Andy, போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிறான். பற்றுதல் இல்லாமல் மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வரும் Andy-க்கு, பொருளாதார சிக்கலும் சேர்கிறது. விவாகரத்து பெற்ற அவனது தம்பி Hank-ற்கும் பொருளாதார பிரச்சினைகள், child care support-ற்காக அவன் மகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உட்பட. Andy-யின் ஆலோசனைப்படி ஒரு நகைக் கடையை கொள்ளையடிக்க ஒப்புக்கொள்கிறான், Hank. வழக்கமான ஒரு crime கதைதான், கொள்ளையடிக்க அவர்கள் தேர்ந்தெடுப்பது அவர்களது பெற்றோரின் கடை என்பதைத்தவிர! இதற்குப்பிறகு நிகழ்பவற்றை Non-Linear திரைக்கதை உத்தியில் படமாக்கியிருக்கிறார், Lumet.
வழக்கமான Crime Thriller கதைகளுக்கு உண்டான ஒரு பரபரப்பு இருந்தாலும், இவ்வகைப் படங்களில் இல்லாத வகையில் ஒரு குடும்பத்தினரின் இடையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்களையும் அழகாகக் கையாண்டிருப்பதே, இப்படத்தை வேறுபடுத்தி காட்டுகிறது.
மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டாலும், ஆறறிவு உடையவன் என்று பேசினாலும், சுயநலத்திற்காக எதுவும் செய்ய வேண்டிய தருணங்களிலும், இக்கட்டான சூழ்நிலையிலும், அவனது உள்ளிருக்கும் மிருகம் வெளிவருவதுதான் இயற்கை என்று தோன்றுகிறது. மேலும் இந்த படத்தை பற்றி யோசித்துக்கொண்டிருந்த பொழுது, 'அட, இதெல்லாம் இங்கதான் நடக்கும், இந்தியால இப்படி எல்லாம் நடக்காது, நாம குடும்பம், பாசம்னு வாழ்பவர்கள்' என்று நினைக்கத் தோன்றியது. பிறகு, சிந்தித்து பார்த்த போதுதான், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை துடி துடிக்க கொன்ற பெண், மனைவி, குழந்தைகளை கொன்ற கணவன் போன்ற தினமலர் கதைகள் நினைவுக்கு வந்தன.வெள்ளையாக இருந்தாலும், குள்ளமாக இருந்தாலும், மொழி என்ற பெயரில் வேறு வேறு ஒலிகளை எழுப்பினாலும், இன்னும் நமக்குள் அந்த மிருகம் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இருக்கும்!
Andy-யாக வரும் Philip Seymour Hoffman வழக்கம் போல் கலக்கியிருக்கிறார். Ethan Hawke மற்றும் Albert Finney--யின் முகங்களில் தெரியும் உணர்ச்சிகள் அட்டகாசம். Serpico, Dog Day Afternoon போன்றவை எனது All time Favorites-களில் உண்டு. Sidney Lumet மற்றொருமுறை நிரூபித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment